சென்னை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு, தூக்கு தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
சென்னையை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு, தூக்கு தண்டனை வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
சென்னையில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவருடைய குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் குருமணி, ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, ஒன்றிய துணை செயலாளர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகே மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரவள்ளி தலைமை தாங்கினார்.
தேசியக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், ஒன்றிய தலைவர் வனிதாதேவி, நகர தலைவர் மல்லிகா, துணை செயலாளர்கள் பூபதி, ஈஸ்வரி, லட்சுமி, மீரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோட்டூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாதர் சங்க ஒன்றிய தலைவர் சுலோசனா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் உஷா, ஒன்றிய துணை தலைவர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் அம்புஜம், ஒன்றிய துணை செயலாளர் ம.தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொரடாச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவுரி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கேசவராஜ், துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story