காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்


காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்
x
தினத்தந்தி 20 July 2018 4:45 AM IST (Updated: 20 July 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து மணந்த மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர் ஆவார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், கன்னடபாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). தென்னிந்திய ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர். இவர் மேற்கு தாம்பரம், பட்டேல் நகர் பகுதியில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார்.

இவரது மனைவி சரண்யா. இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

தற்கொலை

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்துக்கொண்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி பிரிந்து சென்றதால் அசோக்குமார் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள அறையில் அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story