மரணம் அடைந்த மடாதிபதியின் உடலை, கிருஷ்ணர் கோவிலுக்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு கோவில் முன்பு வைத்து சடங்குகள் செய்யப்பட்டன


மரணம் அடைந்த மடாதிபதியின் உடலை, கிருஷ்ணர் கோவிலுக்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு கோவில் முன்பு வைத்து சடங்குகள் செய்யப்பட்டன
x
தினத்தந்தி 20 July 2018 4:30 AM IST (Updated: 20 July 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

மரணம் அடைந்த மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் உடலை கிருஷ்ணர் கோவிலுக்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோவில் முன்பு அவருடைய உடல் வைக்கப்பட்டு சடங்குகள் செய்யப்

மங்களூரு, 

மரணம் அடைந்த மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் உடலை கிருஷ்ணர் கோவிலுக்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோவில் முன்பு அவருடைய உடல் வைக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன.

எதிர்ப்பு

உடுப்பி மாவட்டம் சிரூரில் உள்ள சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருடைய சாவில் சந்தேகம் ஏற்பட்டதால், போலீசார் உத்தரவுப்படி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடல், அவரது சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், மடாதிபதியின் உடலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கிருஷ்ணர் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மடாதிபதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருந்ததால், கோவிலுக்குள் அவருடைய உடலை கொண்டு செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவில் முன்பு வைத்து மடாதிபதியின் உடலுக்கு மத்துவ(இந்து) சம்பிரதாயப்படி பல்வேறு பூஜைகள், சடங்குகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அடக்கம்

அதையடுத்து அவருடைய உடல் சிரூர் தலைமை மடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்தும் உடுப்பி மட சம்பிரதாயப்படியும், மத்துவ சம்பிரதாயப்படியும் பல்வேறு பூஜைகள், சடங்குகள் செய்யப்பட்டன. அதையடுத்து மடத்தின் வளாகத்திலேயே குழிதோண்டி மடாதிபதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், உடுப்பி தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி பட் உள்பட பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Next Story