வட கர்நாடகத்திற்கு தேவேகவுடா அநீதி இழைத்ததாக குற்றச்சாட்டு பகிரங்க விவாதத்திற்கு ஜெகதீஷ் ஷெட்டர் தயாரா? ஜனதா தளம்(எஸ்) சவால்


வட கர்நாடகத்திற்கு தேவேகவுடா அநீதி இழைத்ததாக குற்றச்சாட்டு பகிரங்க விவாதத்திற்கு ஜெகதீஷ் ஷெட்டர் தயாரா? ஜனதா தளம்(எஸ்) சவால்
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 20 July 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

வட கர்நாடகத்திற்கு தேவேகவுடா அநீதி இழைத்ததாக குற்றம்சாட்டும் ஜெகதீஷ் ஷெட்டர், பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி சவால் விடுத்துள்ளது.

பெங்களூரு, 

வட கர்நாடகத்திற்கு தேவேகவுடா அநீதி இழைத்ததாக குற்றம்சாட்டும் ஜெகதீஷ் ஷெட்டர், பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி சவால் விடுத்துள்ளது.

ஜனதா தளம்(எஸ்) கட்சி செய்தித்தொடர்பாளர் ஒய்.எஸ்.வி.தத்தா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

வெள்ளை அறிக்கை

முன்னாள் முதல்–மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வட கர்நாடகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வட கர்நாடகத்திற்கு தேவேகவுடா எதையும் செய்யவில்லை, அநீதி இழைத்துவிட்டார் என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். வட கர்நாடகத்திற்கு தேவேகவுடா செய்த அளவுக்கு வேறு யாரும் பணிகளை செய்தது இல்லை.

கடந்த 40 ஆண்டுகளாக நீர்ப்பாசன வி‌ஷயங்களில் தேவேகவுடாவுடன் இணைந்து நான் பணியாற்றி வருகிறேன். வட கர்நாடகத்தின் நீர்ப்பாசனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். உப்பள்ளியல் ரெயில்வே பணிமனைக்கு புத்துயிர் அளித்தது தேவேகவுடா என்பதை ஜெகதீஷ் ஷெட்டர் தெரிந்துகொள்ள வேண்டும்.

பகிரங்க விவாதத்திற்கு தயாரா?

தேவேகவுடா குடும்பத்தினர் வட கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அப்படி என்றால், அதுபற்றி பகிரங்க விவாதம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் தயாரா?. தேவேகவுடா 6 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்.

ஆனால் தேவேகவுடா வட கர்நாடகத்திற்கு பெரிய அநீதி இழைத்துவிட்டது போல் குற்றம் சுமத்துகிறார்கள். இது சரியல்ல. உப்பள்ளி ரெயில்வே கோட்டத்தை உருவாக்கியதே தேவேகவுடா தான். இதை பா.ஜனதா தலைவர்கள் மறக்கக்கூடாது. மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் தான் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒய்.எஸ்.வி.தத்தா கூறினார்.


Next Story