சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2018 10:30 PM GMT (Updated: 20 July 2018 7:26 PM GMT)

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி,

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் வன்முறைகளை தடுக்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிவகாசி பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் நாகூர்கனி தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாகராஜ் தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் அய்யாச்சாமி நிறைவு செய்தார். இதில் பொருளாளர் சந்தனம், காது கேளாதோர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story