தேவாலாவில் அதிகபட்சமாக 83 மி.மீட்டர் மழை பதிவு: மரம் விழுந்து 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தொடர் பலத்த மழையால் அதிகபட்சமாக தேவாலாவில் 83 மி.மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் கூடலு£ர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவுவதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கூடலூர் தாலுகா தேவாலா, மரப்பாலம், நாடுகாணி மற்றும் பந்தலூர், சேரம்பாடி, கொளப்பள்ளி உள்பட பல பகுதிகளில் இரவு தொடங்கி நேற்று விடியற்காலை வரை பலத்த மழை பெய்தது.
இதனால் தேவாலாவில் அதிகபட்சமாக 83 மி. மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து நாடுகாணி, பொன்னு£ர் மற்றும் பந்தலு£ர் பகுதியில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையால் நேற்று கூடலூர், பந்தலு£ர் தாலுகாக்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லு£ரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் கூடலூர் நகர பகுதியில் மழை சற்று குறைவாகவே காணப்பட்டது.
இதனிடையே கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சி முனைப்பகுதியில் நேற்று காலை 7.15 மணிக்கு மரம் ஒன்று சரிந்து விழுந்தது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த நடுவட்டம் பேரூராட்சி ஊழியர்கள், கூடலூர் நிலைய அலுவலர் (பொறுப்பு) அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொட்டும் மழையில் மரத்தை வெட்டி அகற்றினர். இதைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டதால் வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் கூடலு£ர் நகர பகுதியில் காலை 10 முதல் பகல் 1 மணி வரை லேசாக வெயில் காணப்பட்டது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் மாறி பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.