ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி, வில்லவிளை பகுதியை சேர்ந்தவர் குமார் ஜான் சகாயம் (வயது35), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உண்டு. குமார் ஜான் சகாயம் சொந்த ஆட்டோவை ஆரல்வாய்மொழி சந்திப்பில் ஓட்டி வந்தார். இவருக்கு மது பழக்கம் உண்டு. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று குமார் ஜான் சகாயம் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதை மனைவி அனிதா கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே, மனமுடைந்த குமார் ஜான் சகாயம், வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குமார் ஜான் சகாயம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story