மொபட்டில் வைத்து இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் ரூ.2 லட்சம் திருட்டு மர்மநபர் கைவரிசை
பாளையங்கோட்டையில் மொபட்டில் வைத்து இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் மொபட்டில் வைத்து இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்பாளையங்கோட்டை கோரிப்பள்ளம் புனித மத்தேயூ தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 60). இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வசந்தா.
பொன்ராஜ் பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு வங்கிக்கு பணம் எடுக்க தனது மொபட்டில் நேற்று சென்றனர். பின்னால் அவருடைய மனைவி வசந்தா உட்கார்ந்து இருந்தார். வங்கிக்கு சென்று பொன்ராஜ் ரூ.2 லட்சம் பணம் எடுத்தார்.
அந்த பணத்தை பையில் சுருட்டி தனது மொபட்டில் வைத்தார். பின்னர் எதிரே உள்ள டீக்கடையில் பகல் 12 மணி அளவில் பொன்ராஜ் டீக்குடித்து கொண்டு இருந்தார். அப்போது மொபட் அருகே வசந்தா நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஆஸ்பத்திரிக்கு எப்படி போவது என வசந்தாவின் கவனத்தை திசை திருப்பினார்.
ரூ.2 லட்சம் திருட்டுஅப்போது அந்த நபர் மொபட்டில் இருந்து ரூ.2 லட்சத்தை நைசாக திருடிச் சென்றார். கண்இமைக்கும் நேரத்தில் அந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.