பஞ்சப்பட்டி ஏரியை தூர்வாரக்கோரி தே.மு.தி.க.வினர் கோட்டாட்சியரிடம் மனு
பஞ்சப்பட்டி ஏரியை தூர்வாரக்கோரி தே.மு.தி.க.வினர் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
குளித்தலை,
தே.மு.தி.க.வின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் தங்கவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் நவனீதன் உள்ளிட்ட இக்கட்சியினர் நேற்று குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோட்டாட்சியர் லியாகத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் மூன்றாவது ஏரி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டியில் உள்ள ஏரியாகும். இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இந்த ஏரியில் மழைக்காலங்களில் நீர் நிரம்பினால் மட்டுமே இதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தும், கிணறுகளில் நீர் ஊற்றும் எடுத்து வந்தது. மழைக்காலம் தொடங்கும் முன்பே இந்த ஏரியை தூர்வாரி செப்பனிட்டால் மட்டுமே மழைநீர் வீணாகுவதை தடுக்கமுடியும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்.
எனவே இந்த ஏரியை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் தொண்டமாங்கினம் பகுதியில் உள்ள கிணற்றில் தினேஷ்குமார் என்ற பள்ளி மாணவன் விழுந்து உயிரிழந்ததற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பாகும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வகையில் இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நல்ல குடிநீர், கழிப்பிடம், சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். பள்ளி அருகேயுள்ள கிணற்றை பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும். மேலும் கோட்டாட்சியர் இப்பள்ளியை ஆய்வு செய்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story