பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2018 4:15 AM IST (Updated: 22 July 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்்்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அனிபா முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார்.

பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிக்கும் உரிமை தனியாருக்கு கொடுத்ததை ரத்து செய்து அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வேண்டும். உயர்்த்தப்பட்ட இன்சூரன்ஸ் கட்டணத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் செல்வம், அரிகரன், ராஜ், தமிழ்வாணன், ராஜேந்திரன், வீரமணி, மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story