குளச்சலில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
குளச்சலில் இறைச்சி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
குளச்சல்,
குளச்சல் நகராட்சியில் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சரவணகுமார் அறிவுரையின் பேரில், சுகாதார ஆய்வாளர் வர்க்கீஸ், தியாகராஜன் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலையில் குளச்சல் அண்ணாசிலை, பள்ளிகோடு, பீச்ரோடு, மார்க்கெட் பகுதிகளில் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? இறைச்சி கடைகள் சுகாதாரமான நிலையில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது அதிகாரிகள் கூறியதாவது:–
பொது இடங்களில் இறைச்சி வெட்டவோ, விற்பனை செய்யவோ கூடாது. இறைச்சி விற்பனை செய்ய முறையான அனுமதி பெற வேண்டும். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்த கூடாது. கடைகளில் இறைச்சிகளை மறைத்து சிவப்பு துணி கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story