திருவாரூர் அருகே பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி அதிகாரி ஆய்வு
திருவாரூர் அருகே எண்கண், நெய்குப்பை பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணித்திட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சரவணவேல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக அவர், திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வடிகால் வாய்க்கால் கரை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து எண்கண், நெய்குப்பை ஆகிய பகுதிகளில் பாசன வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை அதிகாரி சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தை அடைவதற்குள் தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கடைமடை வரை தண்ணீர் சென்று அடைந்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என உத்தர விட்டார்.

Related Tags :
Next Story