பேச்சுவார்த்தையில் உடன்பாடு பொன்மலை வாரச்சந்தையில் புதிய கட்டணத்தை வியாபாரிகள் செலுத்தினர்
பொன்மலை வாரச்சந்தை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய கட்டணத்தை வியாபாரிகள் செலுத்தினார்கள்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி பொன்மலையில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தையும், கம்பிகேட் அருகே மற்ற நாட்களில் தினசரி சந்தையும் செயல்பட்டு வருகிறது. அங்கு தரைக்கடை, தள்ளுவண்டி கடை என 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வியாபாரிகளிடம் வாடகை வசூலித்து கொள்ள ரெயில்வே நிர்வாகம் பொன்மலை சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட்டது. ஆனால் தனியார் ஒப்பந்ததாரர் நிர்ணயித்த கட்டணதொகையை செலுத்த வியாபாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனால் பொன்மலை சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கலெக்டரிடமும் மனு அளித்தனர். இதையடுத்து திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் பொன்மலை சந்தை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஒவ்வொரு கடைகளுக்கும் ஏற்றாற்போல் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தலை சுமை வியாபாரிகளுக்கு ரூ.15-ம், தரைக்கடைகளுக்கு ரூ.110-ம், இரு சக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.20-ம், மூன்று சக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.30-ம், அனைத்து வகையான வண்டிகளுக்கு ரூ.40-ம், நான்கு சக்கர வாகன விற்பனையகத்துக்கு ரூ.100-ம், பிரசார வாகனங்களுக்கு ரூ.110-ம், கனரக வாகனங்களுக்கு ரூ.150-ம், டாடா ஏசிக்கு ரூ.75-ம், மினி லாரிக்கு ரூ.100-ம், டிரைலர் லாரிக்கு ரூ.500-ம், கார் பார்க்கிங்கிற்கு ரூ.10-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கம்பிகேட் தினசரி வாரச்சந்தையில் தரைக்கடைகளுக்கு ரூ.60-ம், மூன்று சக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.30-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கட்டண தொகையை செலுத்த வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் காலையில் பொன்மலை வாரச்சந்தை கூடியது. மக்கள் ஆர்வமுடன் வந்து பொருட்களை வாங்கி சென்றனர். அப்போது சந்தையில் வியாபாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டணத்தொகை அமலுக்கு வந்தது. புதிய கட்டணத்தொகையை தனியார் ஒப்பந்ததாரர் வசூல் செய்து வியாபாரிகளிடம் ரசீது வழங்கினார்.

Related Tags :
Next Story