4–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.36¾ கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம்
லாரிகள் வேலைநிறுத்தத்தால் ரூ.36¾ கோடி மதிப்பிலான ரப்பர் ஷீட்கள், தேங்காய், தும்பு ஆகியவை தேக்கம் அடைந்துள்ளதாக குமரி மாவட்ட வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கடந்த 20–ந் தேதி தொடங்கியது.
நேற்று 4–வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள் நாகர்கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், லாரி உரிமையாளர்களின் சொந்த இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
வேலை நிறுத்தத்தால் குமரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்படும் பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்குகளுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை. இதனால் உற்பத்தியாளர்கள் குடோன்களிலேயே தேங்காய், தும்பு, ரப்பர் ஷீட், ரப்பர் பால், ரப்பர் மர தடிகள் போன்றவை தேங்கி கிடக்கின்றன.
அதே நேரத்தில் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பெட்ரோல்– டீசல் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும் லாரிகள் வழக்கம் போல் இயங்கின. கேரளாவுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகளின் விலையில் பெரிய அளவு மாற்றம் இல்லை. வெளிமாநில காய்கறிகளைத்தவிர மற்ற காய்கறிகளின் வரத்துப்போக்கு வழக்கம்போல் நடைபெறுவதால் ஒருசில காய்கறிகளின் விலை ஒன்றிரண்டு ரூபாய் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மனோகரன் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் 1500 லாரிகள் தொடர்ந்து 4–வது நாளாக நேற்றும் இயக்கப்படவில்லை. இதனால் உற்பத்தியாளர்களின் குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேங்காய், ரப்பர்ஷீட், ரப்பர்பால், ரப்பர் மர தடிகள், தும்பு, சாமிதோப்பு பகுதியில் உள்ள உப்பளங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் உப்பு ஆகியவை தேங்கி கிடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்ட ரப்பர் மொத்த வியாபாரி பாலச்சந்திரன் நாயர் கூறியதாவது;–
குமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ரப்பர் தரமான ரப்பராகும். இதனால் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரப்பர்ஷீட்கள் மற்றும் ரப்பர் பால் போன்றவறை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ரப்பர் உரிமம் உடைய மொத்த வியாபாரிகள் 150 பேர் உள்ளது. உரிமம் இல்லாத சிறு, சிறு வியாபாரிகள் 150–க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
நாங்கள் ரப்பர்ஷீட்களை கொள்முதல் செய்து வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைத்து வருகிறோம். கடந்த 4 நாட்களாக லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக குமரி மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான 500 டன்கள் எடைகொண்ட ரப்பர் ஷீட்களும், ரூ.80 லட்சம் மதிப்பிலான 100 டன் ஸ்கிராப் ரப்பர்களும் தேங்கியுள்ளன என்றார்.
இதேபோல் பல கோடி மதிப்பிலான ரப்பர் பால் மற்றும் ரப்பர் மரக்கட்டைகளும் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு புகழ்பெற்ற ஈத்தாமொழி தேங்காயும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னை, கேரளா, மும்பை, அரியானா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்காய்கள் இருப்பில் இருக்க, இருக்க எடை குறைந்து போவதால் கொள்முதல் செய்த வியாபாரிகளுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. கட்டாய தேவை உள்ள பகுதிகளுக்கு டெம்போக்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதேபோல் மும்பை, அரியானா போன்ற மாநிலங்களுக்கு தும்பு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றன. கதம்பைத்தூளும் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.25 கோடி மதிப்பிலான நெடுந்தும்புகள் மற்றும் கதம்பைத்தூள் ஆகியவை தேங்கிக்கிடக்கின்றன என்றார்.
இதேபோல் சாமிதோப்பு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பும் தேங்கியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
லாரிகள் வேலை நிறுத்ததால் சரக்கு ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றனர். இதேபோல் தேங்காய்கள் தேக்கம் அடைவதால் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். இதேபோல் தும்பு மற்றும் கதம்பை உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story