கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்வது குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையத்தொடங்கியது.
இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்தநிலையில் கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கியது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ஐந்தருவியை மூழ்கடித்தபடி சீறி பாய்ந்து சென்றது. மெயின் அருவி, சினிபால்ஸ், பெரிய பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நுழைவுவாயிலை பூட்டி சீல் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நேற்று 15-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய், நாகமரை, பூச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Tags :
Next Story