வேலைவாய்ப்பு- வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி 2 கிராம மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்


வேலைவாய்ப்பு- வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி 2 கிராம மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி 2 கிராம மக்கள் நேற்று கலெக்டரிடம் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் பகுதி மக்கள் சுமார் 70 பேர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருந்ததாவது;-

எங்கள் கிராம பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. அதன் மூலம் எங்கள் ஊரிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் அதிகப்படியான மக்கள் நேரடியாகவும், ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வேலை வாய்ப்பு பெற்று நல்ல வருமானத்தை ஈட்டி வந்தனர். இலவச மருத்துவ முகாம், குழந்தைகள் படிப்புக்கான ஊக்கத்தொகை, ஊர் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் என பல உதவிகள் செய்யப்பட்டு வந்தது.

தற்போது ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகளின் படிப்பு உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமலும், வருமானத்துக்கு வழி இல்லாமலும் தவித்து வருகிறோம். எனவே கிராம மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

Next Story