அணுகுசாலையை அடைக்கும் முடிவினை கைவிடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தேவையூர் கிராமத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் அணுகு சாலையை அடைக்கும் முடிவினை கைவிடக்கோரி கலெக்டரிடம், கிராமமக்கள் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் சாந்தா, மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர்.
இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் கிராமத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோவில் சுற்றி வசிக்கும் ஒரு தரப்பினரை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் செங்கோலன், ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், உதயகுமார் ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேவையூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோவில் எதிரே நெடுஞ்சாலையில் இருந்து, கிராமத்திற்கு வருவதற்கு அணுகு சாலை உள்ளது. அந்த அணுகுசாலையை அடைப்பதற்காக பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த அணுகுசாலையின் கீழ்புறம் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், சுடுகாடு உள்ளன. அந்த அணுகுசாலையின் மேல்புறம் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில், ஸ்ரீ இருசாயி அம்மன் கோவில் மற்றும் ஏரிகள் உள்ளன. ஆகையால் அந்த அணுகுசாலையின் வழியாக மேற்படி பொதுமக்கள் கோவில்களுக்கும், சுடுகாட்டிற்கும் போக வேண்டும். எனவே அந்த அணுகுசாலையை அடைத்து விட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுவார்கள். எனவே தேவையூர் கிராமத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோவில் எதிரே உள்ள அணுகுசாலையை அடைக் கும் முடிவினை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story