மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் குறைந்தபட்ச ஊதிய அமல்படுத்தக்கோரி நடத்தினர்


மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் குறைந்தபட்ச ஊதிய அமல்படுத்தக்கோரி நடத்தினர்
x
தினத்தந்தி 24 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

குறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்தக்கோரி திருச்சி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி சங்க துணைத்தலைவர்கள் கிச்சான், துணை செயலாளர் தர்மா, பொருளாளர் நாகராஜ் உள்பட நிர்வாகிகள் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண், பெண் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் சுய உதவிக்குழு தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி நாள்தோறும் ரூ.625 ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவேண்டும். மாநகராட்சியில் அத்தியாவசியமான பணியை செய்யும் சுய உதவி குழு தொகுப்பூதிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். பாதாள சாக்கடை தூய்மை பணிக்கு கேரளாவை போல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story