குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 24 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

பெருங்கடம்பனூர், வடகுடி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி நாகையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்வு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாகை ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வைரவநாதன் கலந்துகொண்டு பேசினார். இதில் தே.மு.தி.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெருங்கடம்பனூர் ஊராட்சி, வைரவன் இருப்பு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு சாலையை சீரமைக்க வேண்டும். வடகுடி ஊராட்சி பாலக்காடு கிராமத்தில் ரேஷன் கடை கட்டிடம் மற்றும் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். பெருங்கடம்பனூர், வடகுடி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story