காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜனதா போராட்டம்


காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2018 3:51 AM IST (Updated: 24 July 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு வலியுறுத்தி காமயகவுண்டன்பட்டியில் நேற்று பா.ஜனதாவினர் மாநில செயற்குழு உறுப்பினர் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உத்தமபாளையம்,

காமயகவுண்டன்பட்டியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்ததில் பணம் வாங்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தனிநபர் கழிப்பறை அமைப்பதில் குளறுபடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நேற்று பா.ஜனதாவினர் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன் சம்பந்தப்பட்டவர்கள் மீது 7 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story