போலீசார் வாகன சோதனை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
ஆரல்வாய்மொழியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் கேரளாவுக்கு மினி லாரியில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பிடிபட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கை மாவட்ட பதிவு எண் கொண்ட மினி லாரி ஒன்று வந்தது. அதை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது சரக்குகளின் மேல்பகுதி, இடப்பகுதி, வலப்பகுதி மற்றும் பின்பக்க பகுதிகளில் உமி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு இடையில் இருந்த மூடைகளை சோதனை செய்தபோது அவற்றில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதுவும் தலா 50 கிலோ வீதம் 50 மூடைகளில் மொத்தம் 2,500 கிலோ (2½ டன்) ரேஷன் அரிசியை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்த போது இந்த ரேஷன் அரிசி மூடைகள் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர். அதன் டிரைவரான கேரள மாநிலம் காரோடு பகுதியை சேர்ந்த ஆல்பின் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:–
பறிமுதல் செய்யப்பட்ட மினிலாரி, குமரி மாவட்டம் குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்த கிளீட்டஸ் என்பவருக்கு சொந்தமானது. லாரியில் இருந்த ரேஷன் அரிசி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
ரேஷன் அரிசி கடத்துவதற்காக இந்த மினி லாரி கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
மினி லாரியை சங்கரன்கோவிலில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்துவார்கள். வேறு ஒரு டிரைவர் இந்த லாரியை எடுத்து சென்று ரேஷன் அரிசியை ஏற்றி வந்து அதே பெட்ரோல் பங்க் அருகில் கொண்டு வந்து நிறுத்துவார்.
அதன்பிறகு ஆல்பின் லாரியை ஓட்டி வந்து தமிழக எல்லையான களியக்காவிளையை தாண்டி கேரள எல்லைப்பகுதிக்கு கொண்டுபோய் நிறுத்துவார். அங்கிருந்து வேறு டிரைவர் கேரளாவுக்கு எடுத்து செல்வார் என்ற தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தப்படுகிறது?. கேரளாவில் எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக லாரி உரிமையாளர் மாற்று டிரைவர்களை பயன்படுத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மருதங்கோடு பகுதியை சேர்ந்த மினிலாரி உரிமையாளர் கிளீட்டஸ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story