விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோல் எடுத்துச் செல்ல குழாய்கள் பதிக்க எதிர்ப்பு
நன்னிலம் அருகே விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோல் எடுத்து செல்ல குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நன்னிலம்,
நாகை மாவட்டம் நரிமணத்தில் பெட்ரோல் சுத்திரிகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு இருந்து தற்போது பெட்ரோல் டேங்கர் லாரிகளில் எடுத்து செல்லப் படுகிறது. இதனால் அதிக செலவு ஆவதை தவிர்க்க நரிமணத்தில் இருந்து திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை வழியாக திருச்சி வரை விவசாய நிலங்களில் குழாய்கள் பதித்து அதன் வழியாக பெட்ரோல் எடுத்து செல்ல குழாய்கள் பதிக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இந்த பணிக்கு நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, ஓமக்குளம், மூலங்குடி உள்பட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் குழாய் பதிக்கும் பணியை கைவிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் விவசாய நிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்க விவசாயிகளிடம் அனுமதி பெற நேற்று நன்னிலம் அருகே சொரக்குடிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் வந்தனர். அப்போது அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், விவசாயிகள் குணசேகரன், மாரியப்பன், தெய்வரெங்கம், வெங்கடேசன், ராஜ்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விவசாய நிலங்களில் குழாய்கள் பதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story