5-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: தஞ்சை மாவட்டத்தில் 120 லாரிகள் இயங்கவில்லை
தஞ்சை மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக 120 லாரிகள் இயங்கவில்லை. காமராஜர் மார்க்கெட்டுக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு வரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 120 லாரிகள் இயங்கவில்லை. இதனால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு எந்தவிதமான பொருட்களும் கொண்டுசெல்லப்படவில்லை.
இதேபோல் லாரிகள் ஸ்டிரைக் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் தஞ்சைக்கு வரவில்லை. வழக்கமாக தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு தினமும் 7 லாரிகளில் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை வரும். ஆனால் நேற்று முதல் எந்த லாரியும் வரவில்லை.
இதனால் வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த வெங்காயம், மற்றும் உருளைக்கிழங்கை விற்பனை செய்தனர். இன்னும் ஓரிருநாள் வேலை நிறுத்தம் நீடித்தால் வெங்காயம், உருளைக்கிழங்கின் விலை கடுமையாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story