லாரிகள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்: மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப்பணிகள் அடியோடு முடக்கம்
லாரிகள் 5-வது நாளாக இயக்கப்படாததால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப்பணிகள் அடியோடு முடங்கி உள்ளது.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல்- டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது.
நேற்று 5-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள் நாகர்கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், லாரி உரிமையாளர்களின் சொந்த இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
வேலை நிறுத்தத்தால் குமரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்படும் பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்குகளுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் குடோன்களிலேயே தேங்காய், தும்பு, ரப்பர் ஷீட், ரப்பர் பால், கயிறு போன்ற பொருட்களும், ஏலக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்களும் பல கோடி ரூபாய் அளவில் தேக்கம் அடைந்துள்ளன.
இந்த போராட்டத்தால் வெளிமாநில காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் வரத்து குறைந்துள்ளது. உள்மாவட்ட காய்கறிகளின் வரத்து வழக்கம்போல் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமரேசன் கூறியதாவது:-
குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மொத்தம் 2,750 லாரிகள் உள்ளன. அதில் வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் 1,500 லாரிகள் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் இயக்கப்படவில்லை. இந்த போராட்டத்தால் வெளிமாநில பகுதிகளுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்லக்கூடிய ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், தேங்காய், கயிறு, தும்பு, ஏலக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள் போன்றவை சுமார் ரூ.50 கோடி மதிப்பில் வியாபாரிகள் குடோன்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குடோன்களில் தேங்கிக்கிடக்கின்றன.
மேலும் எங்களுக்கு ஆதரவாக மணல் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதால் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மணல் ஏற்றி வருவது தடைபட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே கட்டுமானப்பணிகள் அடியோடு முடங்கியுள்ளன.
லாரிகள் இயக்கப்படாததால் சுமைதூக்கும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், கயிறு மற்றும் தும்பு ஆலை தொழிலாளர்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்களும், லாரிகளின் டிரைவர்களும் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
இவ்வாறு குமரேசன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story