கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்
ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகே வடுகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவையொட்டி நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) பொங்கல் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரு தரப்பினர் தங்களது கட்சிக்கொடியின் வண்ணத்தை கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கும்போது பூசி இருந்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன் பிறகு கோவிலுக்கு பூசப்பட்ட வண்ணம் மாற்றப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரி வசூலிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில் கோவில் அருகே நேற்று காலையில் திரண்ட இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் ஒரு தரப்பை சேர்ந்த சந்திரா (வயது 45), விஜயா (40), ராசம்மாள் (47) ஆகிய 3 பெண்களும், செல்வமணி (42), ராமச்சந்திரன் (21), மகாதேவன் (35), ரமேஷ் (30) அருண்குமார் (27) உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். இதில் அருண்குமார் வடுகம் கிராமத்தின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.
அதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த அன்பரசன் (41), கதிரவன் (48), சுரேஷ் (39) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் மொத்தம் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் வடுகம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். நாமகிரிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி மற்றும் போலீசார் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்திற்கு ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (நாமகிரிபேட்டை), ராமகிருஷ்ணன் (பேளுக்குறிச்சி) மற்றும் அதிகாரிகள், 2 இருதரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது கட்டளைதாரர் என்ற அமைப்பை எந்த தரப்பினரும் ஏற்படுத்த கூடாது. பொது பூஜை மட்டும் நடைபெறும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளலாம். அன்னதானம் வழங்குவது, பேனர் வைப்பது உள்ளிட்டவைகளை போலீசார் அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும். யார் வரி வசூல் செய்தாலும் வரவு, செலவு கணக்கை ஒழுங்காக தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு அமைதியான முறையில் திருவிழா நடத்துவதாக உறுதி அளித்தனர்.

Related Tags :
Next Story