பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது


பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 25 July 2018 5:35 AM IST (Updated: 25 July 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் நேற்று இரவு 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மும்பை,

தானே மாவட்டம் பிவண்டியில் ரசூல்பாக் பகுதியில் உள்ள 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அபய குரல் எழுப்பினார்கள். அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ேமலும் 5-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இதையடுத்து விடிய-விடிய மீட்பு பணி நடந்தது.

பலத்த மழையினால் சேதம் அடைந்து அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story