4 ஜி அலைக்கற்றை உடனே வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் உண்ணாவிரதம்


4 ஜி அலைக்கற்றை உடனே வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 July 2018 4:30 AM IST (Updated: 25 July 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை உடனே வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப்போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று 2–வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இருதயராஜ் தலைமை தாங்கினார்.


பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை உடனே வழங்க வேண்டும். 3–வது சம்பள மாற்றத்தை உடனே வழங்கவேண்டும். ஓய்வூதிய பங்களிப்பை முறைப்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதிய மாற்றத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.

இதில் நிர்வாகிகள் கிள்ளிவளவன், ராஜாபெரோஸ்முகம்மத், பிரபாகரன், சேகர், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

Next Story