ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கிய விவகாரம் - முன்னாள் முதல்மந்திரியுடன் தொழில்அதிபருக்கு தொடர்பு
பெங்களூரு கிளப்பில் ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கிய விவகாரத்தில் முன்னாள் முதல்-மந்திரியுடன் தொழில்அதிபருக்கு தொடர்பு இருப்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ள பவுரிங் இன்ஸ்டிடியூட் கிளப்பில் உள்ள லாக்கர்களில் தொழில்அதிபர் அவினாஸ் அமர்லால் பதுக்கி வைத்திருந்த ரூ.550 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ.11¾ கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், பணம் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவினாஸ் அமர்லாலுக்கு கர்நாடகத்தை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் கிளப்பில் சிக்கிய சொத்து ஆவணங்கள் மந்திரி ஒருவருக்கு சொந்தமானது என்றும், அதனை கொடுத்துவிடும்படி கிளப் நிர்வாகியான ஸ்ரீகாந்திடம் ரூ.5 கோடி பேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், கிளப்பில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், தொழில்அதிபர் அவினாஸ் அமர்லால் சொத்து சேர்த்தது குறித்தும் அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தொழில்அதிபர் அவினாஸ் அமர்லால் முன்னாள் முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டருடன் தொடர்பு வைத்திருந்த தகவலும் வெளியாகி இருக்கின்றன. அதாவது அவினாஸ் அமர்லால் தொழில்அதிபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கவும், அவர் செய்து வந்த ரியல்எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் தேவையான உதவிகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதுதொடர்பான முக்கிய தகவல்கள் அவினாஸ் அமர்லாலிடம் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றிருப்பதாகவும், அதுகுறித்து கூடிய விரைவில் ஜெகதீஷ் ஷெட்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் லாக்கர் நம்பர் 69, 71, 78 ல் ஜெகதீஷ் ஷெட்டர் ஆவணங்களை வைத்திருந்ததாகவும், அந்த லாக்கர்களுக்கு தனது பெயரை பதிவு செய்யாமல் வேறு ஒருவர் பெயரை ஜெகதீஷ் ஷெட்டர் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story