ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சிலிகான் மணல் கடத்தல்; 6 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சிலிகான் மணல் கடத்தல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2018 3:54 AM IST (Updated: 26 July 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சிலிகான் மணல் கடத்தியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக லாரிகளில் சிலிகான் மணல் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்–இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் ஆகியோர் நேற்று காலை அண்ணாசிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 7 லாரிகள் வரிசையாக சென்றன. சந்தேகத்தின் பேரில் போலீசார் லாரிகளை நிறுத்தி சோதனை செய்து பார்த்த போது பீங்கான் பாத்திரங்கள் தயாரிக்க பயன்படுத்தும் சிலிகான் மணல் இருந்ததை கண்டு பிடித்து கைப்பற்றினர்.

அதற்குள் லாரி டிரைவர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 6 லாரி டிரைவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த பிரபு (வயது 21), ராகவேந்திரன் (24), செங்குன்றத்தை சேர்ந்த சேது (21), ஹாஜி (21) கும்மிடிபூண்டியை சேர்ந்த ஏகாம்பரம் (35) தேர்வாயை சேர்ந்த அஜித் (21) என்பது தெரியவந்தது. ஆந்திராவில் உள்ள கூடூரில் இருந்து சென்னைக்கு சிலிகான் மணல் கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story