தூத்துக்குடியில் பயங்கரம் உலக்கையால் அடித்து மனைவி படுகொலை; கணவர் கைது வேலைக்கு செல்லாததை கண்டித்தால் ஆத்திரம்
தூத்துக்குடியில் வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் ஆத்திரத்தில் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் ஆத்திரத்தில் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
மீன்வெட்டும் தொழிலாளிதூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமிகாலனி தாய்நகரை சேர்ந்தவர் சடையன். இவர் மகன் சண்முகசுந்தரம் (வயது 62). இவருடைய மனைவி மோட்சராணி (52). இவர்களுக்கு செல்வகுமார், தங்கராஜ் என்ற 2 மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.
வீட்டில் சண்முகசுந்தரம், அவருடைய மனைவி மோட்சராணி ஆகியோர் வசித்து வந்தனர். மோட்சராணி தருவைகுளம் மீன் ஏலம் விடும் இடத்தில் மீன் வெட்டி கொடுக்கும் வேலை செய்து வந்தார். சண்முகசுந்தரம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
உலக்கையால் அடித்து கொலைஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றிருந்த சண்முகசுந்தரம் நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வேலைக்கு செல்லாததை மோட்சராணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரம், வீட்டில் இருந்த உலக்கையால் மோட்சராணியின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
கணவர் கைதுஇதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் மோட்சராணியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சண்முகசுந்தரத்தை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை உலக்கையால் கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.