அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப்படுத்தி உத்தரவு கலெக்டர் வழங்கினார்


அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப்படுத்தி உத்தரவு கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 July 2018 3:45 AM IST (Updated: 26 July 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பொன்னேரி பேரூராட்சியில் மனை பிரிவு வரன்முறைப்படுத்த ஆணை பிறப்பித்திருந்தார்.

பொன்னேரி,

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்னர் அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு மனை பிரிவு வரன்முறை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பொன்னேரி பேரூராட்சியில் மனை பிரிவு வரன்முறைப்படுத்த ஆணை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் திருவள்ளுர் மண்டல நகர் ஊரமைப்பு துறையும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து பொன்னேரியில் அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான முகாமை நடத்தியது.

இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த முகாமில் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவற்றில் மனைகள் வாங்கி வரன்முறைப்படுத்த 700-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 500 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 250 பேருக்கு வீட்டு மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்ட உத்தரவு நகல்களையும் மரக்கன்றுகளையும் கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் வழங்கினர்.

அப்போது பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் கார்த்திகேயன், பேரூராட்சி செயல்அலுவலர் பாஸ்கரன், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொன்னேரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகள் காப்போம் திட்டத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தொடங்கி வைத்தார். அப்போது பெண்கள் உறுதிமொழி எடுத்தனர்.

இந்த விழாவில் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் தயாளன், திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட சமூகநல அலுவலர் மீனா, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர் ராஜேஷ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதாதேவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story