முதல் மனைவியை துரத்திவிட்டு 2-வது திருமணம்: சென்னை இறைச்சிக்கடைக்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு
முதல் மனைவியை துரத்தி விட்டு 2-வது திருமணம் செய்த சென்னை இறைச்சிக்கடைக்காரர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி,
சென்னை ஆவடி குளக்கரை பெரியார்நகரை சேர்ந்தவர் சுலைமான். இவரது மகன் முகமது சித்திக்(வயது44). இவர் அங்கு இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரசிதாபேகம்(40). இவருக்கும், முகமது சித்திக்கிற்கும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் தரப்பில், 40 பவுன்நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை என வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. முகமதுசித்திக்-ரசிதாபேகம் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன புதிதில் வாழ்க்கை சந்தோஷமாக போனது. 2004-ம் ஆண்டு முதல் ரசிதாபேகத்திடம் மேலும் பணம் கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் தொந்தரவு கொடுக்க தொடங்கினார்களாம்.
மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட அவர் அனைத்தையும் பொறுத்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ரசிதாபேகத்தை அவரது கணவர் கொடுமைப்படுத்தி துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் முகமது சித்திக்கை பிரிந்து ரசிதாபேகம் திருச்சி சுப்பிரமணியபுரத்துக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல், முகமது சித்திக் 2-ம் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திருச்சி கூடுதல் மகளிர் கோர்ட்டில் கணவர் முகமது சித்திக், கொளுந்தன் முகமதுபாரூக் மற்றும் உறவினர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரசிதாபேகம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட வரதட்சணையை திரும்ப தரவில்லை என்றும், தனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹெலன்ரூபி, சென்னை ஆவடியை சேர்ந்த முகமது சித்திக், இவரது தம்பி முகமது பாரூக், உறவினர்கள் அமீனா, அப்துல்சமத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story