கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் இடும்பையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஷேக்இஸ்மாயில் வரவேற்றார்.
சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற வேண்டும்.
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் சூழ்நிலையில் நகரில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி, குளங்களுக்கு தண்ணீர் வரும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
எனவே, பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கணேசன், அன்புரோஸ், மணி, இளைஞர் மன்ற செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story