தர்மபுரி மாவட்டத்தில் 7-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு


தர்மபுரி மாவட்டத்தில் 7-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 26 July 2018 10:30 PM GMT (Updated: 26 July 2018 9:49 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இதனால் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

தர்மபுரி,

டீசல் விலையை குறைக்க வேண்டும். நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் கடந்த 20-ந்தேதி முதல் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 4,500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. தர்மபுரி மாவட்டத்தின் உற்பத்தியாகும் பல்வேறு விளைபொருட்கள், பல்வேறு வகையான காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்த பணிகள் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளன. தக்காளி மற்றும் பல்வேறு வகை பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் லாரிகளின் போக்குவரத்தை அடிப்படையாக கொண்டு நடக்கும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story