நகரப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் பொருட்களை திருடிய வாலிபர் கைது
புதுவை நகரப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் பொருட்களை திருடிய திருச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை நகரப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் பொருட்களை திருடிய திருச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள அவருடைய கூட்டாளிகள் 4 பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
புதுச்சேரி நகரப்பகுதியில் சமீப காலமாக சுற்றுலா பயணிகளின் கார்கள் மற்றும் பணி நிமித்தம் காரணமாக புதுச்சேரிக்கு வருபவர்களின் கார்களின் கண்ணாடியை உடைத்து அதில் உள்ள மடிக் கணினி, செல்போன், கைப்பை உள்ளிட்ட பொருட்களை ஒரு கும்பல் திருடி வந்தது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின் தனிப்படை அமைக்கப்பட்டது.
சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் இந்த தனிப்படையில் இடம் பெற்றிருந்தனர்.
இந்தநிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரி அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி மற்றும் கைப்பையை திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர், திருச்சி ராம்ஜிநகர் மில் காலனி 8-வது குறுக்குத்தெருவை சேர்ந்த தமிழரசனின் மகனான பெயிண்டர் பிரசாத் (வயது 26) என்பவர் தெரியவந்தது. அதையடுத்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கார்களில் உள்ள பொருட்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிச்செல்வோம். அதேபோல் சாலைகளில் ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு டிரைவரின் கவனத்தை திசைத்திருப்பியும் பொருட்கள் திருடுவோம். அதன்படி புதுவை நகரப்பகுதியில் 8 கார்களிலும், காரைக்காலில் 2 கார்களில் இருந்தும் பொருட்களை திருடி உள்ளோம். இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்கவும் திருட்டுபோன பொருட்களை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருடியது எப்படி?
கார் கண்ணாடியை உடைக்க பயன்படுத்தும் உண்டிவில்.
புதுவையில் நகரப்பகுதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிக்கும் கார்களை நோட்டமிட்டு உள்ளனர். பின்னர் திருட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைக்க ஊக்கு, ரப்பர் பேண்டு, பால் குண்டு, சாக்லெட் கவர் ஆகியவற்றை கொண்டு உண்டிவில் போல் தயார் செய்து அதன் மூலமாக கண்ணாடியை சேதப்படுத்திவிட்டு சென்றுவிடுவார். மற்றொரு கூட்டாளி கையில் துணியை கட்டிக்கொண்டு சேதமடைந்த கண்ணாடியை உடைத்து காரில் உள்ள மடிக்கணினி, செல்போன், கைப்பை உள்ளிட்ட பொருட்களை திருடிவிட்டு சென்றுவிடுவார்.
அதேபோல் காரில் உள்ள டிரைவரின் கவனத்தை திசைத்திருப்பி பொருட்களை திருடி உள்ளனர். அதாவது சாலையில் ரூபாய் நோட்டுக்களை சிதறிவிட்டு டிரைவரிடம் உங்கள் ரூபாய் கீழே கிடக்கிறது என கவனத்தை திசை திருப்புவார்கள். அப்போது கார் டிரைவர் சாலையில் கிடக்கும் ரூபாய் நோட்டுகளை எடுக்கும்போது காரில் உள்ள பொருட்களை மற்றொருவர் திருடிச்சென்றுவிடுவார்.
இவ்வாறு அந்த கும்பல் கார்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Tags :
Next Story