கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரிக்கை
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டிசொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க.வினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயல்பட்டினம்இதே கோரிக்கையை வலியுறுத்தி காயல்பட்டினம் நகரசபை அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் முத்து முகமது, ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.