ராமநாதபுரம் பாரதிநகர் முதல் ராமேசுவரம் வரை டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு, தொண்டர்கள் திரண்டனர்
ராமநாதபுரம் பாரதிநகர் முதல் ராமேசுவரம் வரை டி.டி.வி.தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பனைக்குளம்,
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பு கிராமத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்து வதற்காக அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை வந்தார். பின்பு அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரத்துக்கு புறப்பட் டார். வரும் வழியில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அவருக்கு மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், அமைப்பு செயலாளரும், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரு மான ஜி.முனியசாமி, மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்தீசுவரன், நகர் செயலாளர் ரஞ்சித்குமார், திருப்புல்லாணி ஒன்றியம் சங்கர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், ஆளுயர மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்த வேனில் டி.டி.வி.தினகரனை அழைத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் முன்செல்ல டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் வழிநெடுகிலும் பொதுமக்களை பார்த்து கும்பிட்டவாறு சென்றார். இதேபோல குயவன்குடி, வழுதூர் விலக்கு, பெருங்குளம், நாகாச்சி, உச்சிப்புளி, பிரப்பன்வலசை, வேதாளை, மண்டபம் என வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர்.
பாம்பன் பாலத்தில் சென்றபோது கடலுக்குள் விசைப்படகில் இளைஞர்கள் கட்சிக்கொடியை அசைத்து வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக ராமேசுவரம் சென்றார். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவர் நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந் தித்து பேசினார்.
அப்போது மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீசுவரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்துக்கு சென்ற டி.டி.வி.தினகரன் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு மணிமண்டபத்தை சுற்றிப்பார்த்த அவர் அங்கிருந்து புறப்பட்டு பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மதுரைக்கு சென்றார்.