நெய்வேலியில் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது


நெய்வேலியில் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 July 2018 3:20 AM IST (Updated: 28 July 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் முந்திரி தோப்புக்குள் பதுங்கி இருந்தபோது டெல்டா பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கடலூர், 


நெய்வேலி அருகே உள்ள வடக்குமேலூரை சேர்ந்தவர் அய்யப்பன். ரவுடியான இவரை கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்று வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய நெய்வேலி வடக்குத்து முருகன்கோவில் தெருவைசேர்ந்த கோபி(25) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் மற்றொரு வழக்கு, கடலூர் சாவடியில் விளையாட்டு பயிற்சியாளர் ரமேஷ்பாபுவை வழிமறித்து வெட்டிய வழக்கு என 2 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

எனவே தலைமறைவாக இருந்த கோபியை பிடிக்க மாவட்ட டெல்டா பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன் பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் கோபியை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள காப்பான் குளம் முந்திரிதோப்புக்குள் கோபி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் முந்திரிதோப்புக்கு சென்று அங்கே பதுங்கி இருந்த கோபியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் 

Next Story