வால்பாறையில் தொடர் மழை: சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் பாய்ந்து செல்கிறது


வால்பாறையில் தொடர் மழை: சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் பாய்ந்து செல்கிறது
x
தினத்தந்தி 28 July 2018 4:28 AM IST (Updated: 28 July 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. சேடல்பாதை வழியாக மட்டும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது. 2 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை,

வால்பாறையில் தொடர்ந்து தென் மேற்கு பருவமழை பெய்துவருகிறது. அவ்வப்போது கனமழை பெய்கிறது. இந்த மழை காரணமாக வால்பாறை–பொள்ளாச்சி சாலையை ஓட்டியுள்ள வனப்பகுதிகளிலும் ஆங்காங்கே அருவிகளாக தண்ணீர் கொட்டிவருகிறது. இதனால் வால்பாறையில் உள்ள சோலையார்அணையின் நீர்மட்டம் 27–வது நாளாக முழு கொள்ளளவான 160 அடியை தாண்டிய நிலையிலேயே இருந்துவருகிறது. சோலையார் மின்நிலையம் 1–ல், மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான பணி நடைபெற்று வருவதால் அவ்வப்போது மின்நிலையம் இயக்கப்பட்டு பின்பு, நிறுத்தப்பட்டது.

மேலும் வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளிலும் கன மழை பெய்துவருவதால் கேரள சோலையார்அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் வால்பாறை சோலையார் அணையில் உள்ள மின்நிலையம் –2 இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது. சோலையார்அணைக்குட்பட்ட இரண்டு மின்நிலையங்களுமே நிறுத்தப்பட்டுள்ளதால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோலையார்அணையின் சேடல்பாதை வழியாக மட்டும் பரம்பிக்குளம் அணைக்கு 3573 கனஅடித்தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. வால்பாறை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையார் அணையில் 9 மி.மீ மழையும், வால்பாறையில் 12 மி.மீ மழையும், சின்னக்கல்லாரில் 30 மி.மீமழையும், நீராரில் 26 மி.மீ மழையும் பெய்துள்ளது.சோலையார்அணைக்கு விநாடிக்கு 3401.08 கனஅடித்தண்ணீர் வந்து வந்துகொண்டிருக்கிறது. சோலையார்அணையிலிருந்து சேடல் பாதை வழியாக 3573 கனஅடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. சோலையார்அணையின் நீர் மட்டம் தற்போது 163 அடியாக இருந்துவருகிறது.


Related Tags :
Next Story