குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்
குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த புதிய மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மசோதாவை திரும்பப்பெற வலியுத்தியும் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 28–ந் தேதி (அதாவது நேற்று ) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் குமரி மாவட்டத்திலும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை 12 மணி நேரம் போராட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக எந்தவொரு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நேற்று புறநோயாளிகளுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி இந்திய மருத்துவர் சங்க மாநில தலைவர் டாக்டர் ஜெயலாலிடம் கேட்டபோது கூறியதாவது:–
மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏழை மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் பங்கேற்றன. இதே போல் குமரி மாவட்டத்தில் 450 தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 2 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி புற நோயாளிகளுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. எனினும் பிரசவம் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்க ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கிளை உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க குமரி கிளை தலைவர் டாக்டர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் விஜயகுமார், டாக்டர்கள் பிரவீன், மோகன், முரளிதரன், பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் தங்களது கோரிக்கைகளை விளக்கி பேசினர். தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்து கூறினர்.

Related Tags :
Next Story