திருவண்ணாமலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை


திருவண்ணாமலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 29 July 2018 12:42 AM IST (Updated: 29 July 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வீட்டு மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை காஞ்சி ரோடு மின் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவரது மகள் திவ்யபிரியா (21). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் பெற்றோர் கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தராததால் மனவேதனையில் திவ்யபிரியா இருந்தார். இந்த நிலையில் திவ்யபிரியா கடந்த 26-ந் தேதி மாடியில் செல்போன் பேசிக்கொண்டு இருந்தவாறு கீழே குதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story