நாகூர் வெட்டாற்று கரையில் கருவாடு காயவைக்கும் தளத்தை அதிகாரி ஆய்வு


நாகூர் வெட்டாற்று கரையில் கருவாடு காயவைக்கும் தளத்தை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் வெட்டாற்று கரையில் கருவாடு காயவைக்கும் தளத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்,

நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் வெட்டாற்று கரையில் மீனவர்கள் கருவாடு காயவைக்கும் தொழில் செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கருவாடு குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் நாகூர் வெட்டாற்று கரையில் உள்ள கருவாடு காயவைக்கும் தளத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் கருவாடு காயவைக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து கருவாடு காயவைக்கும் பணியை பார்வையிட்டார்.

அப்போது கருவாடு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மீன்கள் ஆற்று நீரில் கழுவப்பட்டு சுத்தமாகவும், தரையில் விரிப்புகள் விரிக்கப்பட்டும் காயவைக்கப்பட்டிருந்தது. மேலும் உப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டு கருவாடு பதப்படுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் கருவாடு காயவைக்கப்படும் பகுதியை சுற்றி குப்பைகள் இருந்தது. எனவே குப்பைகளை அகற்றி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று கருவாடு காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது நாகூர் வருவாய் கிராம உதவியாளர் செல்வமணி இருந்தார். 

Next Story