வெங்கல் அருகே மதுபோதையில் தகராறு; வாலிபர் கைது


வெங்கல் அருகே மதுபோதையில் தகராறு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 July 2018 3:45 AM IST (Updated: 29 July 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

வெங்கல் அருகே மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் சீத்தஞ்சேரி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே நேற்று முன்தினம் வெங்கல் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 38), அவரது நண்பர் எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் (38) ஆகியோர் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெங்கல் கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (25), சித்துகாடு கிராமத்தை சேர்ந்த தினேஷ் (25) ஆகியோர் அமர்ந்து மது குடித்தார்கள்.

அதன் பின்னர் தமிழ்செல்வன், நரசிம்மன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது குடிபோதையில் இருந்த சார்லஸ் மற்றும் தினேஷ் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட தமிழ்செல்வன், நரசிம்மன் ஆகியோரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர்.

அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் அடி-தடியாக மாறியது. இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த தமிழ்செல்வன், நரசிம்மன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வனின் மனைவி கற்பகம் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிபூரணம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இது தொடர்பாக சார்லசை போலீசார் கைது செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story