பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என ‘போர்டு’ வைக்க வேண்டும் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என போர்டு வைக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர்,
பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வியாபாரிகளுக்கு கூட்டம் நடத்தி அதில் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்று போர்டு வைக்க வேண்டும்.
கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் இல்லாத மற்ற பைகளை கொண்டு வந்து பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும். அல்லது இயற்கையாக கிடைக்கும் வாழை இலை, பாக்குமட்டை, ஆலமர இலை, தேக்கு இலைகளில் உருவாக்கும் பொருட்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கிச் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story