சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்


சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 July 2018 4:00 AM IST (Updated: 29 July 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தர போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்–லைன் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துதல் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆன்–லைன் மூலம் இ–சேவை பாஸ்போர்ட் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால் 3 நாட்களில் அவர்களுடைய சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை முடிக்க வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து அவர்களுடைய சான்றிதழ்களை போலீசார் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த கையெழுத்தை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் வந்து போட்டு செல்ல காலதாமதம் ஏற்படுவதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதற்கும் தாமதம் ஏற்படுகிறது.

மற்ற மாவட்டங்களில் 5 நாட்களுக்குள் இ–சேவை பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30 நாட்களுக்கு மேல் ஆவதாக தெரியவந்துள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பணியை உடனுக்குடன் முடித்து விரைவாக பாஸ்போர்ட்டை மக்களுக்கு பெற்றுத்தர போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விரைவாக பாஸ்போர்ட் சேவை பணியை முடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 2,500 பேருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தரப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story