இலவச கல்வித்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அட்டவணை இன இயக்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


இலவச கல்வித்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அட்டவணை இன இயக்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 29 July 2018 5:00 AM IST (Updated: 29 July 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

இலவச கல்வித்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அட்டவணை இன இயக்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அட்டவணை இன இயக்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் தலித் சேனா இயக்கத்தை சேர்ந்த பாலசுந்தரம், நீதிமன்ற தலித் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த மாறன், அட்டவணை கூட்டமைப்பின் துணைத்தலைவர் கலைமாறன், புதுவை பல்கலைக்கழக ஆதிதிராவிடர் ஊழியர் சங்கத்தை சேர்ந்த சந்திரன், அம்பேத்கர் தேசிய விருதாளர் சங்கத்தை சேர்ந்த முருகையன், மாணவர் கூட்டமைப்பின் அமைப்பாளர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2016–ல் புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட இலவச கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட இன மாணவர்கள் இதுவரை வாங்கிய கல்விக்கடனை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். புதுவையில் வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். புதுவையை சேர்ந்த வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


Next Story