டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது - ஆயுதங்கள் பறிமுதல்
உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டியில் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடிமங்கலம்,
டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த கடைக்கு முன்பு ஒருவர் கத்தி, வாள் ஆகிய ஆயுதங்களுடன் நின்றிருந்தார். மேலும் அவர், கடையை ஏன் திறக்கவில்லை, சீக்கிரம் வந்து கடையை திறக்க வேண்டும், இல்லை என்றால் இந்த கடையை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தார்.
அத்தடன் கையில் இருந்த வாள், கத்தியை சுழற்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அதனால் அச்சம் அடைந்த அந்த பகுதியினர் இது குறித்து உடனடியாக குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்போது அந்த டாஸ்மாக் கடை முன்பு நின்று மிரட்டல் விடுத்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் விமல் (வயது 41) என்பதும், உடுமலை தாலுகா வடுகபாளையத்தை அடுத்த லிங்கமநாயக்கன்புதூர் நடுவீதியை சேர்ந்த லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கடையில் மது குடிக்க வருபவர்களிடம் மது கேட்டால் பணம் கேட்கிறார்கள். கடையிலும் இலவசமாக மது தருவதில்லை. இதனால் மதுபானம் கொடுக்காத இந்த கடை இருக்கக்கூடாது என்று கடைக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
மேலும் நேற்று முன்தினம் போலீஸ்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு போன் செய்து பெதப்பம்பட்டி டாஸ்மாக் கடையை வெடி குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தவரும் இவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் விமலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த வாள், கத்தி ஆகிய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story