மாநிலம் முழுவதும் கனமழைக்கு 138 பேர் உயிரிழப்பு


மாநிலம் முழுவதும் கனமழைக்கு 138 பேர் உயிரிழப்பு
x

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

மும்பை,

பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததுடன், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்தநிலையில் தேசிய பேரிடர் பொறுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டு மராட்டியத்தில் மொத்தம் 138 பேர் நடப்பு பருவ மழைக்காலத்தில் பல்வேறு மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும், 117 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story