கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் போலீசார் வழக்குப்பதிவு
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தோகைமலை போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை,
தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள தெலுங்கபட்டியில் தேவாதியம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தில் பங்காளிகள் அனைவரும் கிடா வெட்டி திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் கிடா வெட்டி திருவிழா நடத்தும்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்(வயது 50) தரப்பை சேர்ந்தவர்கள் ஒரு கோஷ்டியாகவும், ஆண்டி(55) தரப்பை சேர்ந்தவர்கள் ஒரு கோஷ்டியாகவும் பிரிந்து விட்டனர். இதனால் கோவில்களுக்கு இரு கோஷ்டியினரும் தனித்தனியாக திருவிழா நடத்துவது என்று முடிவு செய்தனர்.
இதனை அடுத்து கடந்த 22-ந் தேதி அன்று ஆனந்தன் தரப்பை சேர்ந்தவர்கள் தேவாதியம்மன் மற்றும் காமாட்சியம்மனுக்கு கிடா வெட்டி திருவிழா நடத்தி உள்ளனர். அதன் பின்னர் ஆண்டி தரப்பை சேர்ந்தவர்கள் கிடா வெட்டி திருவிழா நடத்துவது சம்பந்தமாக கோவிலில் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த ஆனந்தன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கும், ஆண்டி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் ஆண்டி அளித்த புகாரின் பேரில் சங்கிலிமுத்து, வடிவேல், கோவிந்தன், மற்றொரு வடிவேல், மற்றொரு கோவிந்தன், ஆனந்தன், முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் குமரேசன், குருநாதன், செந்தில், சுப்ரமணி, முருகன், ஈஸ்வரன், ராஜா ஆகியோர் மீதும் என மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 14 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆண்டி தரப்பினர் நேற்று கோவில் திருவிழா நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story