தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி நீலகிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி நீலகிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 30 July 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி நீலகிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி,

தமிழக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், கோவில் சொத்துகளை கோவிலுக்கே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று மாலை 3 மணிக்கு இந்து முன்னணியினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் மோகன், உமாபதி, நகர செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் சாமுண்டி செந்தில் வரவேற்றார். திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் அண்ணாதுரை, நீலகிரி மாவட்ட தலைவர் மஞ்சுநாத், பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய தலைவர் முருகேசன், துணை தலைவர் மணிகண்டன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஒன்றிய பொதுச்செயலாளர் ராகுல் பரமேஷ்வரன், துணை தலைவர் ஜெயராமன், செயலாளர் ராஜா, ஊட்டி மேற்கு நகர தலைவர் நாகராஜ், நகர செயலாளர் சுதாகர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர தலைவர் பிரஜோத் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தினேஷ்குமார், இந்து ஆட்டோ முன்னணி தலைவர் தமிழழகன், செயலாளர் மனோஜ், பொதுச்செயலாளர் சிவச்சந்திரன், துணை தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட செயலாளர் ஹரிபிரசாத், மாவட்ட செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பந்தலூர் ஒன்றிய தலைவர் எம்.எஸ்.மனோஜ், சிவன் மலை கிரிவல குழு செயலாளர் நடராஜ், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, பா.ஜனதா நிர்வாகி நளினி சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் ரமேஷ், நகர பொதுச்செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அமைப்பின் நிர்வாகிகள் ராஜசேகா, ராஜீ, சுரேஷ், ராதா, சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story